காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி. திவாரி காலமானார்😞

  |   செய்திகள்

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான என்.டி. திவாரி இன்று காலமானார். அவருக்கு வயது 93. இன்று அவரது பிறந்த நாளாகும்.

உத்தராகண்ட் மாநிலம் நைனிதால் மாவட்டத்தில் 1925-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி பிறந்தவர் என்.டி. திவாரி. சுதந்திரப் போராட்ட வீரரான இவர், தனது சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். நாடு சுதந்திரமடைந்ததும் முதன்முதலில் 1952-ம் ஆண்டு நைனிதால் தொகுதியிலிருந்து உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

பலமுறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்ட அவர், ராஜீவ்காந்தியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 3 முறை உத்தரப் பிரதேச முதல்வராகவும், ஒருமுறை உத்தராகண்ட் முதல்வராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬