தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை⛈ நீடிக்கும்👍

  |   செய்திகள்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2⃣ நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது📢.

வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 7 செமீ மழை பெய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 6 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 5 செமீ மழை பெய்துள்ளது. ஆம்பூர், வேலூர், பெரியகுளம் பகுதியில் தலா 4 செமீ மழை பதிவாகி உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறியதாவது:

🔈‘‘வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்"

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬