பெண்👩 பத்திரிகையாளர் சபரிமலைக்கு செல்லும் முயற்சி முறியடிப்பு😯

  |   செய்திகள்

சபரிமலையில் நடைபெறும் போராட்டம் காரணமாக, நியூயார்க் டைம்ஸ்📰 பெண் பத்திரிகையாளர் கோவிலுக்கு செல்லும் முயற்சியில் இருந்து பின்வாங்கினார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்களின் போராட்டம் தொடர்கிறது. கோவிலுக்கு செல்லும் வாகனங்களைப் பக்தர்கள் சோதனையிட்டு, 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில் மத்தியில் நேற்று மாலை கோவில் திறக்கப்பட்டது.

அப்போது செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

மறுபுறம் கோவிலுக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு காவல்துறை பாதுகாப்பை கொடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

போராட்டம் காரணமாக நேற்று தடியடி நடந்ததால் பதற்றமான நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலவங்கல், நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் வரும் அக்டோபர் 22ஆம் தேதி வரை 144 தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬