💺ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வழக்கு😳-தமிழக அரசு பதிலளிக்க🗣 உத்தரவு⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

மறைந்த முதலமைச்சர் 💺ஜெயலலிதாவின் போயஸ் 🏡இல்லத்தை அரசு செலவில் நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான😡 வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்குமாறு🗣 தமிழக அரசுக்கு 🏛உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. முன்னதாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இது குறித்து தாக்கல் செய்த மனுவில்📜, "ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவு 🏡இல்லமாக மாற்றுவதற்கு தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஒரு சட்ட விரோதம்😱. ஏனென்றால் 💺ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டவர்😳. அவர்களது 💰சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது 🏛உச்சநீதிமன்றம். இந்நிலையில், அரசு 💸செலவில் நினைவிடமாக மாற்ற முயற்சித்தால் அதுஒரு தவறான முன் உதாரணம் ஆகிவிடும்" என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது 🏛அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆக வேண்டும்😯 என்பதற்காக ⌚கால அவகாசம் கேட்டார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த🗣 நீதிபதிகள் 2 வார காலம் ஒத்திவைத்து அதற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬