திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து 🗳தேர்தல் ஆணையம்🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

மறைந்த 🌞திமுக தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த திருவாரூர் தொகுதி, அவர் மறைந்த பின் காலியாக அறிவிக்கப்பட்டது😐. தற்போதைய நிலவரப்படி திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட 🏛தமிழகத்தில் மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளன😳. இந்த காலி தொகுதிகளுக்கு எப்போது 🗳இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறித்து மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் 🏛மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று நடந்த இதன் விசாரணையில்🗣, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரதா சாஹூ இடைத்தேர்தல் குறித்து பதில் மனு அளித்தார். அதில், 📆பிப்ரவரி 7ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது👍. மேலும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அது பற்றி முடிவெடுக்க முடியாது🚫 என்றும் அதில் தீர்ப்பு⚖ வந்த பிறகு 🗳தேர்தல் 📆தேதி அறிவிக்கப்படும்🎙 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬