💦நீர்நிலைகளில் வண்டல் மண் எடுப்பது குறித்த விவகாரம்😳-சென்னை 🏛உயர்நீதிமன்றம் கேள்வி

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
🌊மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மண் எடுக்க 🌾விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து 🏛தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை📜 பிறப்பித்தது. இதனை மீறி செங்கற்சூளைகளுக்கு சட்ட விரோதமாக😳 அதிகளவில் வண்டல் மண் அள்ளப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது😯. இது குறித்து இன்று நடந்த விசாரணையில், அனுமதிக்கப்பட்ட ஒரு மீட்டர் அளவை தாண்டி சட்ட விரோதமாக🙄 லாரி லாரியாக🚛வண்டல் மண் எடுக்கப்படுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக😟 மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது🗣. இதையடுத்து, மேட்டூர் மட்டுமன்றி, 🏛தமிழகம் முழுவதும் 🌊நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க எந்த விதிகளின் கீழ் அனுமதி அளிக்கப்படுகிறது❓அனுமதி வழங்கும் 👮அதிகாரி யார்❓என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், 🏛தமிழக அரசு 📆2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு⚖ விசாரணையை ஒத்திவைத்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬