கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ்👮 காவல் மேலும் 3⃣ நாள் நீடிப்பு

  |   செய்திகள்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது:chains செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ்👮 காவல் மேலும் 3 நாட்கள் நீட்டித்து சிபிஐ கோர்ட்டு⚖ உத்தரவிட்டு உள்ளது. இத்துடன் கார்த்தி சிதம்பரத்தின் போலீஸ் காவல் 12 நாளாக உயர்ந்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை 6⃣ நாட்கள் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், கடந்த 6ந்தேதி📆 ஆஜர் படுத்தப்பட்டபோது மேலும் 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்திருந்தது.

போலீஸ் காவல் முடிந்து இன்று மாலை பாட்டியாலா சிபிஐ கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் ஆஜர்படுத்தப் பட்டார்.

அதைத்தொடர்ந்து, சிபிஐ தரப்பில், கார்த்திக் சிதம்பரத்திடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஆகவே 6 நாட்கள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு கார்த்தி சிதம்பரம் சார்பில் கடும் எதிர்ப்பு✋ தெரிவிக்கப்பட்டது. தன்னை இரவில் தூங்க விடாமல் சிபிஐ போலீசார்👮 துன்புறுத்தி வருவதாகவும் கூறப்பட்டது😯.

இதைத்தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாட்கள் போலீஸ் காவலில் செல்ல அனுமதி அளித்தும், வரும் 12ந்தேதி📆 அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬