கவுரவ கொலையை தடுக்க🚫 சிறப்பு புகார் பிரிவு👍-மத்திய அரசு🔈

  |   Kollywood

✍இளவேனில்🌄

கவுரவ கொலை செய்யும் சம்பவங்கள் தற்போது நாடு முழுவதும் நடக்கிறது😱. கட்டப்பஞ்சாயத்து செய்து தம்பதியினரை பிரிக்கும் சம்பவங்கள் வடமாநிலங்களில் அதிகளவில் நடைபெற்று வருகிறது😟. இதை எதிர்த்து 🏛உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது😳. வெவ்வேறு சாதியை சேர்ந்த தம்பதியை பிரிக்க 3வது நபருக்கு அதிகாரம் கிடையாது🚫 என்றும், கட்டப்பஞ்சாயத்து செய்து தம்பதியை பிரிப்பது சட்டப்படி குற்றம் என 🏛உச்சநீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதுதொடர்பான வழக்கு நேற்று 🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது😯. கலப்பு 💍திருமணம் செய்த தம்பதியை பிரிப்பதை தடுக்கும் வகையிலான சட்டத்திருத்தம்✍ கொண்டுவருவது குறித்து 23 மாநிலங்கள் அளித்த ஆலோசனையை🤔 ஆய்வு செய்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், கலப்பு 💍திருமணம் செய்த தம்பதிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும்👏, இதுதொடர்பான 📜புகார்களை பெற நாடு முழுவதும் மாவட்டம் தோறும் சிறப்பு புகார் பிரிவை 👮கால்வதுறை சார்பில் அமைக்க உத்தரவிட⚖ வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬