டிடிவி அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க ஹைகோர்ட்⚖ அதிரடி உத்தரவு

  |   செய்திகள்

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல்🗳 ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம்⚖ உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி🎉 பெற்ற தினகரன், குக்கர் சின்னத்தையும், தனது அணி அதிமுக அம்மா என்ற பெயரையும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு📑 தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் டெல்லி ஹைகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கட்சிக்கு தினகரன் ஒதுக்கக்கோரிய பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬