👩பெண்கள் பாதுகாப்பிற்கு பெண் காவலர்களின் 🚲பைக் ரோந்து-டெல்லி 👮போலீஸ்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தலைநகர் 🏛டெல்லியில் பெண்கள் மீதான மோசமான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன😟. இதனைத் தடுக்க 👩பெண்களைக் கொண்டே சிறப்பு ரோந்து 🚲பைக் படை ஒன்றை 👮போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் அமைத்துள்ளார்👏. அதன்படி 👩பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு ரோந்து 🚲பைக்கிலும், இரு பெண் 👮போலீஸ்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்👍. இந்த ரோந்து படையினர் குற்றங்களை தவிர்ப்பது🚫 மட்டுமின்றி, 🏫பள்ளி கல்லூரி மாணவிகளிடையே விழுப்புணர்வையும் ஏற்படுத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது👏. மேலும் இவர்களை தொடர்புகொள்ள ஹிம்மட் பிளஸ் மற்றும் டாக்ஸிகளில் க்யூ ஆர் கோட் முதலிய 📱ஆப்களை பயன்படுத்தலாம் என்றும், பாலியல் வன்கொடுமை😱 சம்பவங்களில் 📜குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 20 நாட்களில் கைது⛓ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் 👮போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
இதனை தொடர்ந்து, பெண்கள் புகார்கள், கவுன்சிலிங் போன்றவற்றிற்கு 1091 என்ற 🔢எண் வசதி செய்யப்பட்டுள்ளது. மன அழுத்தம் தொடர்பாக 👩பெண்களிடம் இருந்து வரும் அழைப்புகளைப்📞 பெற 24x7 நேரமும் விழிப்புடன் இருக்கும் குழு உருவாக்கப்பட்டுள்ளது😯. சிறப்பு ரோந்து குழுவில் உள்ள 8,293 👩பெண் 👮காவலர்களுக்கும், 315 நிகழ்ச்சிகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது👏 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/lCEZGQAA