🌊கடல் சீற்றத்தால் சேதமடைந்த 🏘வீடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம்👍-உதயகுமார்

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🌊கடல் சீற்றத்தையொட்டி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என 💸வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்துள்ளார். இந்திய 🌊கடல்சார் தகவல் மையம் அறிவித்த கடல் அலை சீற்றம்😳 குறித்த எச்சரிக்கையினை மக்களுக்கு சென்றடையும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்😯, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்🔈. மேலும், அவர் கூறுகையில்🎙, "கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணத்தால் 6 நிவாரண முகாம்களில் 👥பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் 423 பொதுமக்கள் ஒரு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 🌊கடல்சீற்றத்தால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி🙄 நடைபெற்று வருகிறது, 10 கிராமங்களில் சேதமடைந்த 🏘வீடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார். மேலும், தூத்துக்குடியில் 83 கிராமங்கள் 🌊கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்😟, சேதமடைந்த 🔌மின் கம்பங்கள் விரைவில் சீரமைக்கப்படும்👍 என்றும் அவர் கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬