சுற்றுலா 👥பயணிகளுக்கு உதவும் வகையில் உதவி மையம் தொடக்கம்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சுற்றுலா 👥பயணிகளுக்கு உதவும் வகையில் 🏛தமிழக சுற்றுலாத்துறையும், 🚆ரயில்வே 👮காவல்துறையும் இணைந்து அமைத்துள்ள உதவி மையத்தை 🚆ரயில்வே ஐ.ஜி. 👮பொன்.மாணிக்கவேல் தொடங்கி வைத்தார்👏. வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில் தொடர்புடைய 🗣மொழிகள் தெரிந்த ரயில்வே 👮காவலர்கள் மற்றும் சுற்றுலாத்துறை ஊழியர்கள் இந்த மையத்தில் பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🎙. சென்னையைச் சுற்றியுள்ள பாரம்பரிய இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களின் சிறப்பம்சங்கள்👍 அவற்றின் தொலைவு உள்ளிட்ட விவரங்களை இந்த மையத்தின் மூலம் பெறலாம்😯. சுற்றுலா தொடர்பான கையடக்க 📷வரைபடங்களையும் பெற்றுக்கொள்ளலாம். 🚗வாகன வசதியும் செய்துகொடுக்கப்படும் என்றும் திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர் உள்ளிட்ட 10 இடங்களில் இந்த உதவி மையங்கள் செயல்படும்🙂 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬