குமரியில் இனயம் சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு எதிர்ப்பு🚫-கடலில்🌊 மீனவர்கள்🐠 முற்றுகை போராட்டம்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய உள்ள இனயம் சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு எதிர்ப்பு😡 தெரிவித்து கோவளம் முதல் மணக்குடி வரையிலான கடல்பகுதியில் 🐠மீனவர்கள் 🌊கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. கன்னியாகுமரி மாவட்டம் இணயம் பகுதியில் சரக்கு பெட்டக வர்த்தக துறைமுகத்தை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது😯. ஆனால் இந்த சரக்கு பெட்டக முனையத்திற்கு 🐠மீனவர்கள் கடும் எதிர்ப்பு😳 தெரிவித்து வருகின்றனர். வர்த்தக துறைமுகம் அமைந்தால் ஒட்டுமொத்த 🐠மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக❓மாறும் எனக் கூறி🗣 மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்🔈. இதனால் இனயம் பகுதிக்கு பதிலாக கோவளம் பகுதியில் சரக்கு பெட்டக வர்த்தக துறைமுகத்தை அமைக்க இருப்பதாக 🏛மத்திய அரசு அறிவித்தது🔈.
ஆனால் இந்தப் பகுதியில் அதிக மீன்வளம் இருப்பதால் 🐠மீன்பிடி தொழிலை நம்பியுள்ள பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்😟 என்று 🏛மத்திய அரசுக்கு எதிராக🚫 சுமார் 44க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று சரக்கு பெட்டக துறைமுகம் அமைய😳 உள்ள கோவளம் முதல் மணக்குடி வரையிலான 🌊கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல்🙄 துறைமுகம் அமைக்க தங்களின் எதிர்ப்பை😡 வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் 🐠மீனவர்கள் பைபர் படகுகளில் கடலில் இறங்கி கருப்புக் கொடி ஏந்தி முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 🐠மீனவர்கள் கடலில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் 🌊கடற்கரைப் பகுதியில் 👮போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்😳. இதே போன்று 🌊கடலோர 👮காவற்படையினரும் தொடர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬