🌊காவேரி விவகாரம்-சட்ட வல்லுனர்களுடன் 💺முதல்வர் ஆலோசனை🤔

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌊காவிரி விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் முதல் அமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 🤔ஆலோசனை நடத்துகிறார். 🌊காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசு மீது தமிழக அரசு 🏛நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது😳. அந்த வழக்கு விசாரணை வரும் 9ம் தேதி உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு, ‘‘ஸ்கீம் என்றால் என்ன?’’ என்று விளக்கம்🎙 கேட்டு தாக்கல் செய்துள்ள 📜மனுவும் 📆9-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த இரு வழக்குகளிலும் 🏛தமிழக அரசு சார்பில் 9 பேர் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளனர். அந்த சட்ட வல்லுனர்கள் குழுவில் மூத்த வக்கீல் சேகர்நாப்தே, லட்சுமணன், அருணாசலம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்😯. அவர்கள் 9 பேரும் இன்று ✈டெல்லியில் இருந்து சென்னை வந்து, இன்று மாலை ⌚4 மணிக்கு முதல்வரை சந்தித்து 🤔ஆலோசனை நடத்தவுள்ளனர்👍. இந்த ஆலோசனை🤔 கூட்டத்தில், 🏛மத்திய அரசுக்கு எதிரான 🏛நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எந்தெந்த வாதங்களை முன் வைத்து வாதாட வேண்டும்🙄 என்று ஆலோசிக்கப்படும்🤔 என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், இந்த 👥கூட்டத்தில் அமைச்சர்களும், மூத்த 👮அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬