தரவரிசை பட்டியலில்📜 அண்ணா பல்கலைக்கழகம் 10வது இடம்-💺முதல்வர் வாழ்த்து💐

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை 📜பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 10-வது இடம் பெற்றதற்கு முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்🔈. தமிழக 🏛அரசு நேற்று வெளியிட்ட 📰செய்திக்குறிப்பில், 2018-ம் ஆண்டிற்கான தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை கட்டமைப்பின் பட்டியலில்📜, அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்தப் பிரிவில் 10-வது இடத்தையும், பல்கலைக்கழகங்களின் பிரிவில் 4-வது இடத்தையும், பொறியியல் பிரிவில் 8-வது இடத்தையும் பெற்றதற்காக👍, டெல்லியில் கடந்த 3-ந்தேதி நடைபெற்ற விழாவில்🎉, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விருதுகள்🏆 வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது🔈. அந்த 🏆விருதுகளை நேற்று சென்னை 🏛தலைமை செயலகத்தில் முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமியிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் காண்பித்து வாழ்த்து💐 பெற்றார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬