இரு 🚲சக்கர வாகனத்தின் பின்னால் அமர்வோருக்கும் தலைக்கவசம் அவசியம்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🚲இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் (ஹெல்மெட்) கட்டாயம் அணிய வேண்டும்👍. அவ்வாறு, தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு 💸அபராதம் வசூலிக்கப்படும் என 🏛தமிழக அரசு எச்சரித்துள்ளது⚠. இதுகுறித்து 🏛தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள 📜அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "தமிழக அரசு சாலை விபத்துகளை குறைப்பதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது👍. இருப்பினும், இந்த ஆண்டு 📆ஜூலை 2018 வரை 38,491 விபத்துக்கள் நடந்துள்ளன😳. இதில் 🚲இரு சக்கர வாகனங்களால் மட்டும் 15,601 விபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது🙄. இரு சக்கர வாகன விபத்துக்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2,476 ஆகும்😱. சென்னை 🏛உயர்நீதிமன்றத்தின் உத்தரவில்⚖ மோட்டார் வாகனச் சட்டத்தில் உள்ளபடி இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளது👏. எனவே அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிந்து, தங்களது பொன்னான உயிரினை காப்பாற்ற கேட்டுக் கொள்கின்றோம்🙏" என்று கூறப்பட்டுள்ளது🗣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬