முக்கொம்பு கொள்ளிடம் 🌊ஆற்றின் குறுக்கே தற்காலிக தடுப்பு🚫 அமைக்கும் பணி தீவிரம்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

திருச்சி முக்கொம்பில் 🌊கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தற்காலிக தடுப்பு🚫 அமைக்கும் பணி இன்னும் 📆4 நாட்களில் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியர் 💺ராசாமணி தெரிவித்துள்ளார்🎙. முக்கொம்பு அணையில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் 8 தூண்களும் 9 மதகுகளும் இடிந்து விழுந்ததை🙄 அடுத்து, மணல் மூட்டைகளால் தற்காலிக தடுப்பு🚫 அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு ⌚24 மணி நேரமும் நடைபெற்று வருகின்றன😯. தொடக்கத்தில் 👥300 தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 👥800 தொழிலாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்👍. இந்நிலையில், பணிகளை ஆய்வு👀 செய்த மாவட்ட ஆட்சியர் 💺ராசாமணி, 5 அடி உயரம் கொண்ட தடுப்பு அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக👏 தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬