இந்தியாவில் ஓரினச்சேர்க்கை உறவு குற்றமல்ல😳-🏛உச்சநீதிமன்றம்⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் ஓரினச்சோ்க்கை அங்கீகரிக்கப்படாததால், அவை தற்போது வரை குற்றச் செயலாகவே கருதப்படுகிறது😐. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு ஓரினச் சோ்க்கை குற்றச்செயல் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 📆10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்க முடியும். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 📆2009 ஆம் ஆண்டு ஓரினசேர்க்கை ஆதரவாளர்களை 📜மனு தாக்கல் செய்தனர். இந்த 📜மனு மீதான இன்றைய விசாரணையில், ஓரினச்சேர்க்கை உறவை குற்றம் என வரையறுக்கும் சட்டப்பிரிவு 377ஐ ரத்து🚫 செய்து, ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக 🏛உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது⚖. இதனால், ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்😳. மேலும், இந்தத் தீர்ப்பை⚖ மறுபரீசிலனை அல்லது திருத்தம் செய்யலாமே தவிர, மேல்முறையீடு செய்ய முடியாது😯 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬