நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு 🌊வெள்ள நிவாரணம் வழங்கக் கூடாது🚫-🏛உயர்நீதிமன்றம்⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

அயனாவரம் 🌊குளத்தை ஆக்கிரமித்து 🏡வீடு கட்டியவர்கள், நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பதால் தங்களுக்கு அங்கு 📜பட்டா வழங்க வேண்டும் எனக் 🙏கோரி சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணை நீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது, 🌊நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு வெள்ள 💸நிவாரணம் வழங்கக்கூடாது🚫 என்று 🏛தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில்🎙, "நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது கடும் குற்றம்😡. நீர்நிலைகளை ஆக்கிரமித்து 🏘வீடுகள் கட்டியவர்களுக்கு பட்டா தர உத்தரவிட முடியாது🙄. நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்😳" என்று கூறினர். மேலும், சென்னையில் உள்ள 💦நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 📆8 வாரங்களில் அகற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் சென்னை மாவட்ட 💺ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர்⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬