முன்கூட்டியே சட்டப்பேரவைத் 🗳தேர்தலை எதிர்நோக்கும் தெலுங்கானா 💺முதல்வர்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தெலங்கானா 💺முதல்வர், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, ஆட்சியைக் கலைத்து முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்கப் போவதாக, கடந்த சில தினங்களாக ஊடகங்களில் 📰செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது, தெலங்கானா 💺முதல்வர் சந்திரசேகர ராவ், 🏛அரசைக் கலைக்கும் தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றி, இதற்கான பரிந்துரையை🗣 ஆளுநர் 💺நரசிம்மனிடம் அளிக்க சந்திரசேகர ராவ் சென்றுள்ளார். ஆட்சிக் கலைக்கப்படும்🙄 பட்சத்தில், வரும் 📆டிசம்பர் மாதம் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்,மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களோடு சேர்த்து தெலங்கானாவுக்கும் சட்டப்பேரவைத் 🗳தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬