ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் 🗿சிலை திருட்டு-👮அதிகாரிகள் ஆய்வு👀

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌎பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் அருள்மிகு 🙏அரங்கநாதர் திருக்கோயிலில் 🇮🇳இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கமாக உள்ளது😯. இந்நிலையில், கோயிலின் மூலவாசல் சேதம் அடைந்துள்ளதாகவும்😟, சில 🗿சிலைகள் காணாமல் போனதாகவும்😳 மதுரை 🏛உயர்நீதிமன்ற கிளையில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜ் என்பவர் வழக்கு பதிவு செய்திருந்தார்😐. இதன் அடிப்படையில், 🏛உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பெயரில் சிலை கடத்தல் தடுப்பு🚫 பிரிவு 🤵எ.டி.எஸ்.பி ராஜாராம் மற்றும் 👥20 பேர் கொண்ட குழு அரங்கநாதர் திருக்கோயிலில் ஆய்வு👀 மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இக்கோயிலின் சக்கரத்தாழ்வார் சன்னதி, ஆயிரங்கால் மண்டபம், கோயிலின் கருவறை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்😦. மேலும் கோயிலின் இணை ஆணையர், குருக்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது👍 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬