🎥'கடைக்குட்டி சிங்கம்' திரை விமர்சனம்📹

  |   Kollywood

⭐⭐⭐
படத்தின் ட்ரைலர்📹 http://v.duta.us/LOY7SwAA

ஊரிலேயே எல்லோரும் மதிக்கும் பெரிய இடத்து குடும்பத்தலைவராக சத்யராஜ். இவருக்கு 👩5 பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். எனினும் ஆண் குழந்தை வேண்டுமென்று ⭐கார்த்தியை பெற்றெடுக்கிறார் சத்யராஜ். ஊரிலேயே சத்யராஜின் குடும்பம் தான் மிக பெரியது. அவருக்கு ஒரே ஒரு ஆசை தான், தன் குடும்பத்தினரை ஒன்றாக நிற்க வைத்து ஒரு குரூப் 📸போட்டோ எடுக்க வேண்டும் என்பது தான். இந்த நேரத்தில் கார்த்தி தன் சொந்தத்தில் திருமணம் செய்யாமல், சாயிஷாவை காதலிக்க, இதனால் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க, இவர்களை எல்லாம் ⭐கார்த்தி எப்படி சமாதானம் செய்து தன் விருப்பத்தை நிறைவேற்றினார்⁉ என்பதை 😢எமோஷ்னல் செண்டிமெண்ட் கலந்து இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. ⭐கார்த்தி-சூரி காட்சிகள் படத்தில் பல இடங்களில் நன்றாக ஒர்க்-அவுட் ஆகியுள்ளது😂. கதாபாத்திரங்களின் பெயர்கள் கூட அற்புதமாக வைக்கப்பட்டுள்ளது. வசனம்🗣 மிகவும் ரசிக்க வைக்கின்றது, குறிப்பாக 💸சொத்து சேர்ப்பதை விட சொந்தங்களை சேருங்கள் 😥எமோஷனலாகவும் சரி, தயவு செய்து சொந்தத்தில் மட்டும் 👩பொண்ணு எடுக்காதீங்க🚫 என்ற காமெடி வசனங்களும் சரி, ரசிக்க வைக்கின்றது. வில்லன் கதாபாத்திரம் மற்றும் சண்டை காட்சிகள் சரியாக அமையவில்லை😟. இரண்டாம் பாதியில் ஒரே பிரச்சனையை திருப்பி திருப்பி பேசுவது எரிச்சலை உண்டு செய்கிறது. மொத்தத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சிறப்பாகவும் எடுத்துள்ளார் 🎬பாண்டிராஜ்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/gHWVvAAA