அடுக்குமாடி 🏗கட்டிட விபத்து-பலி😟 எண்ணிக்கை 2ஆக உயர்வு😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னை கந்தன்சாவடியில் தனியார் 🏥மருத்துவமனையில் சாரம் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்துள்ளது😱. சென்னையை அடுத்த பெருங்குடி அருகே கந்தன்சாவடியில் உள்ள கோவிந்தராஜ் நகரில் தனியார் 🏥மருத்துவமனை உள்ளது. இந்த 🏥மருத்துவமனையின் பின்புறம் ஜெனரேட்டர் வைப்பதற்காக பிரமாண்ட அறை 🏗கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு சாரம் திடீரென சரிந்து😨 விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இவர்களை 🚒தீயணைப்பு படையினர் மீட்டனர்👍. அப்போது பலியானவர் ஒருவர் உடல் மீட்கப்பட்டது😳. அவர் பீகாரை சேர்ந்த கட்டுமான தொழிலாளி 👨பப்லு என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது😯. இறந்தவர் குடும்பத்துக்கு 💸ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்⚖. ஆனால் தற்போது சாரம் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வடைந்து😟 உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது😱.

📲 Get தமிழ் செய்திக்கான on Whatsapp 💬