சிறப்பான 💺ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியல்📜- இரண்டாம் இடத்தில் 🏛தமிழகம்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

பொது விவகாரங்களுக்கான மையம் (பி.ஏ.சி) எனும் அமைப்பு ஆண்டுதோறும் 🇮🇳இந்தியாவில் சிறப்பாக செயல்படும் 🏛மாநிலங்களின் பட்டியலை📜 தயாரித்து வெளியிட்டுவருகிறது. இந்த அமைப்பு 🏛கர்நாடக மாநிலத்தை தலைமை இடமாக வைத்து இயங்கி வருகிறது. 🚰குடிநீர், சாலை, 🔌மின்சாரம், 🚽சாக்கடை போன்ற வசதிகள் 👥மக்களுக்கு கிடைப்பதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு 🔢புள்ளிகள் கொடுக்கப்பட்டு தரவரிசை வழங்கப்படுகிறது. இதனையடுத்து இப்பட்டியல் நேற்று பெங்களூரில் வெளியிடபட்டது👍. இதில், கேரள மாநிலம் தொடர்ந்து 📆3-வது ஆண்டாக முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது😯. கேரளாவிற்கு அடுத்ததாக 🏛தமிழ் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது👏. இந்த பட்டியலில் தெலுங்கானா, கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே 3, 4, 5-வது இடங்களை பிடித்துள்ளன😐. பீகார் மாநிலம் இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது🙄 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திக்கான on Whatsapp 💬