விதிமீறல் கட்டடங்களை🏗 இடித்து அகற்ற வேண்டும்😳 - சென்னை உயர்நீதிமன்றம்🔊

  |   செய்திகள்

விதிமீறல் கட்டடங்களை🏗 இடித்து அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்🏛 உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கடலோர ஒழுங்குமுறை விதிகளை📄 மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து தள்ள வேண்டும். 🏙சென்னை ஈ.சி.ஆரில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதி முறைகளை மீறி யார்யார்👥 கட்டடம் கட்டி உள்ளனர் என்று கண்டறியப்பட்டு👀 உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக 🌊நீலாங்கரை முதல் உத்தண்டி வரையில் உள்ள கட்டடங்கள் குறித்து புகைப்படம்📸 ஆவண ஆதாரங்களுடன் அளித்து, விதி மீறல் கட்டடங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ⚡மின் இணைப்பு, குடிநீர்இணைப்பு🚰 குறித்தும் தகவல் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது👍.

📲 Get Tamil News on Whatsapp 💬