💸வணிகர் மாநாட்டில் ⭐கமல் பேச்சு🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சென்னை திருவேற்காட்டில் நடைபெற்று வரும் 💸வணிகர் மாநாட்டில் பேசிய🎙 மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் ⭐கமல்ஹாசன் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள் என்று கூறியுள்ளார்🎙. இது குறித்து அவர் பேசியுள்ளதாவது🎙, "தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்ரா ஆகிய 3 மாநிலங்களின் வணிகர்கள்தான் அரசுக்கு சரியாக வரி அளிக்கின்றனர்👍. நாம் கொடுக்கும் 💸வரிப்பணத்தினால் வடநாட்டு 🌾விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது😌. அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த மற்ற துறைகளுடன் வணிகத்துறையும் இணைவது அவசியம், 🏛தமிழகத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லும் கடமை அனைவருக்கும் உள்ளது. தேவையில்லாமல் கடையடைப்பு இல்லை என்ற உறுதியை பாராட்டுகிறேன்👏" என்று தெரிவித்தார்🔈.
மேலும், "இழந்த மாண்பை மீட்டெடுக்க மக்கள் நீதி மய்யம் திட்டம் உள்ளது🙂, மக்கள் நீதி கட்சியின் மய்யம் விசில் 📱செயலியை வணிகர்களும் பயன்படுத்தலாம்😯, கிராம சபை என்பது நான் கண்டுபிடித்தது இல்லை🙄, நான் நினைவுபடுத்தியது, கிராம சபை கூட்டத்தில் 💸வணிகர்கள் அனைவரும் பெருமையுடன் கலந்துகொள்ள வேண்டும்😏, ஆண்டுக்கு 4 நாட்கள் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பது அவசியம்😯 என்றும் கிராம சபைக்கு சாதகமாகத்தான் 🏛நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளது👍" என்றும் கூறினார்🗣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬