அமைச்சரின் 🎙பேட்டியால் 🏛தமிழக அரசின் குட்டு வெளியானது😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

✍நீட் தேர்விற்காக 📹வீடியோ கான்பரன்சிங் மூலம் அளித்த பயிற்சி 👥மாணவர்களுக்கு புரியவில்லை😳 என்று 🏫பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளதன் மூலம் 🏛தமிழக அரசின் அலங்கோலம்😱 வெளிப்பட்டுள்ளது. 📰செய்தியாளர்களிடம் கோபியில் பேட்டியளித்த அமைச்சர் கூறுகையில்🎙, "தமிழக அரசு அளித்த நீட் பயிற்சியில் 72,000 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பெரும்பான்மையான மாணவர்களுக்கு எதுவுமே புரியாததால் இறுதியில் 8,626 பேர் மட்டுமே பயிற்சி பெற்றனர். அவர்களிலே நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களாக இருக்கிற 3,154 மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் 26 நாட்கள் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது" என்று கூறினார்🗣.
தொடர்ந்து பேசிய அவர்🎙, "இதற்கான முழுமுயற்சியை அரசு மேற்கொண்டு ஏறத்தாழ குறைந்தபட்சம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. வரும் கல்வியாண்டில் குறைந்தபட்சம் 50,000 மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயார்படுத்தப்படுவர். தினமும் மாலையில் 1 மணி நேரமும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 மணி நேரமும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்" என்று கூறினார்😳. அமைச்சரின் இந்த பேச்சு நகைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதே சமயம் 👥மாணவர்களின் நிலையை நினைத்தால் மிகுந்த 😟கவலையாக உள்ளதாகவும் 📚கல்வியாளர்கள் 🏛தமிழக அரசுக்கு கடும் 😡கண்டனம் தெரிவித்துள்ளனர்🔈.

📲 Get Tamil News on Whatsapp 💬