தந்தையை இழந்த 👨மாணவனின் கல்வி 💸செலவை ஏற்கிறது 🏛தமிழக அரசு

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

நீட் ✍தேர்வு எழுத மகனை கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி என்பவர் மரணமடைந்துள்ளார்😳. வெளிமாநிலங்களில் சென்டர்கள் அளிக்கப்பட்டிருந்ததால் ✍நீட் தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடியாமல் பல இடங்களில் பெற்றோர்கள் மனஉளைச்சல்😱 அடைந்தனர். இந்நிலையில் கிருஷ்ணசாமி மன அழுத்தம் ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதனிடையே கிருஷ்ணசாமி மனைவியிடம் 📱தொலைபேசி மூலம் பேசிய தமிழக முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்தார். அப்போது முதல்வரிடம் தனது கணவர் இறந்ததில்😟 மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும், தனது மகனின் கல்விச் செலவுகளை 🏛தமிழக அரசே ஏற்று கொள்ள வேண்டும் என்றும் மாணவர் கஸ்தூரியின் தாய் முதல்வரிடம் 🙏கோரினார். இதனை ஏற்ற முதல்வர் 💺பழனிசாமி மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் கல்வி செலவை 🏛தமிழக அரசே முழுமையாக ஏற்கும் என உறுதியளித்துள்ளார்👍. மேலும் 👨மாணவனின் குடும்பத்திற்கு 💸ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬