'நீட் கொலைகளுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்😡'-⭐விஷால்💻

  |   Kollywood

✍இளவேனில்🌄

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் ✍தேர்வு எழுதுவதற்காக மகனுடன் சென்ற திருத்துறைப்பூண்டியை சேர்ந்த 👴கிருஷ்ணசாமி, 👨மகன் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது வெளியே இருந்த அவருக்கு திடீரென 😱மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்😟. இதுதொடர்பாக நடிகர் ⭐விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்💻. அதில், "இன்று நீட் ✍தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவியருக்கும் எனது வாழ்த்துகள்💐. கடும் மன உளைச்சலுக்கும் அலைக்கழிப்புக்கும் இடையிலும் கூட தங்கள் மருத்துவக் கனவுக்காக என் தம்பி, தங்கைகள் இந்தத் தேர்வை எழுதியிருக்கிறார்கள். நீட் ✍தேர்வுக்காக கேரளா சென்று அங்கேயே தந்தை கிருஷ்ணசாமியை பறி கொடுத்த 👨மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன். இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது😟. அவரை ஒரு மருத்துவராக்கி கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்றுவது நம் கடமை💪. கஸ்தூரி மகாலிங்கத்துக்கு அதற்கான உதவிகளை செய்யத் தயார். 👩அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான ✍நீட் பலிகளுக்கு😟 மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம்👍 பதில் கொடுப்பார்கள்😡’’ எனக் கூறியுள்ளார்🗣.

📲 Get Kollywood on Whatsapp 💬