நீட் ✍தேர்வு எழுத மகனை அழைத்து சென்ற தந்தை மரணம்😟

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

நீட் தேர்வு ✍எழுத மகனை கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி என்பவர் மரணமடைந்துள்ளார்😟. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி விளக்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மகன் கஸ்தூரி மகாலிங்கத்திற்கு கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே சம்மணம் என்ற இடத்தில் ப்பளிக் பள்ளியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்ததது🙄. இதனையடுத்து இன்று காலை ✍நீட் எழுத கஸ்தூரி மகாலிங்கத்தை தந்தை எர்ணாகுளம் அழைத்து வந்துள்ளார்😯. மாணவன் தேர்வு மையத்திற்குள் சென்றபின் திடீர் மாரடைப்பு😱 காரணமாக தந்தை கிருஷ்ணசாமி உயிரிழந்துள்ளார்😟. உயிரிழந்த கிருஷ்ணசாமி உடல் எர்ணாகுளம் சிட்டி 🏥மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தந்தை உயிரிழந்தது😟 தெரியாமல் 👦மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு ✍எழுதி வருவது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬