🌊காவேரி, கோதாவரி இணைக்கப்பட்டால் 💦125 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்👍-💺முதல்வர்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🌊கோதாவரி, காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்திற்கு 💦125 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்👍. சேலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திருவாக்கவுண்டனூரில் இருந்து குரங்குச்சாவடி வரை 1,280 மீட்டர் தொலைவுக்கு 💸82 கோடி ரூபாய் மதிப்பில் 4 வழிப்பாதை கொண்ட புதிய மேம்பாலத்தைத் தமிழக முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்👏. அப்போது பேசிய அவர் கூறுகையில்🎙, "தமிழகத்தின் நீர் ஆதாரத்திற்கு நிரந்தரத் தீர்வு😌 காண்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் ஆலோசனை🤔 நடத்தபட்டது. அப்போது அவர் காவிரி 🤝இணைப்புத் திட்டம் குறித்து என்னிடம் பேசினார். மேலும் இரு 🌊நதிகளும் இணைக்கப்பட்டால் 🏛தமிழகத்திற்கு 💦125 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்" என்று தெரிவித்தார்🔈.

📲 Get Tamil News on Whatsapp 💬