சென்னை 🚄மெட்ரோ வழித்தடங்களை ஆய்வு செய்யும் முதன்மை பாதுகாப்பு 👮ஆணையர்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சென்னை 🚄மெட்ரோ ரயில் புதிய 🛤வழித்தடங்கள் பாதுகாப்பு சோதனை நிறைவடைந்து விரைவில் சேவை தொடங்கும்🎉 என்று மெட்ரோ ரயில் முதன்மை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்👍. சென்னை கோயம்பேடு முதல் செனாய் நகர் வரையிலான சேவை இரண்டு 🛤வழிதடங்களிலும் செனாய் நகர் முதல் நேரு பூங்கா வரையிலான சேவை ஒரு வழிதடத்திலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செனாய் நகர் முதல் நேரு பூங்கா வரையான 2-வது புதிய வழித்தடத்தையும் நேரு பூங்கா முதல் சென்னை சென்ட்ரல் வரையிலான புதிய சுரங்க பாதை சோதனையோட்டத்தையும் 🚄மெட்ரோ ரயில் முதன்மை பாதுகாப்பு ஆணையர் 👮மனோகரன் ஆய்வு செய்தார்👍. 4 நாட்கள் நடைபெறவுள்ள ஆய்வில் அவர் சின்னமலை முதல் டி.எம்.எஸ் வரையிலான வழிதடத்தை ஆய்வு செய்யவுள்ளார்😯. ஆய்வுகள் நிறைவடைந்து விரைவில் சேவை தொடங்கும்🎉 என்றும் அவர் தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get Tamil News on Whatsapp 💬