தென்மேற்கு 🌊அரபிக்கடலுக்கு 🐠மீனவர்கள் செல்ல தடை🚫-வானிலை மையம்🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தென் மேற்கு 🌊அரபிக்கடல் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் 🐠மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்🚫 என்று வானிலை மையம் 🐠மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது⚠. இது குறித்து வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது🎙, "தென் மேற்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது😳. இந்த காற்றழுத்த தாழ்வு, குறைந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்💪. இதனால் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் 🏛தென் தமிழகம் மற்றும் 🏛வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை ☔மழை பெய்யும். இந்த மழை 2 நாட்களுக்கு இருக்கக்கூடும். எனவே, அப்பகுதி 🐠மீனவர்கள் மீன் பிடிக்க தடை🚫 செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது🔈" என்று கூறியுள்ளார். மேலும், கடந்த ⌚24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பழநியில் 4 செ.மீ மழையும், உடுமலைபேட்டையில் ☔3 செ.மீ மழையும் பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

📲 Get Tamil News on Whatsapp 💬