தினகரனுக்கு எதிர்ப்பு😡 தெரிவித்த தொகுதி மக்கள்-விரட்டியடித்த😳 ஆதரவாளர்கள்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

தனியார் 🏫பள்ளி மூலம், சுற்றுலா சென்ற போது புனேவில் 🌊ஏரியில் மூழ்கி உயிரிழந்த தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த 3 👥மாணவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி 💸நிதி உதவி வழங்குவதற்காக டிடிவி தினகரன் தனது தொகுதியான ஆர்.கே.நகருக்கு சென்றார்😯. போன முறை பல எதிர்ப்புகள்😡 இருந்ததால் இம்முறை தன்னுடைய ஆதரவாளர்களை துணைக்கு அழைத்து சென்றிருந்தார். 💸நிதி உதவி அளித்துவிட்டு ஆர்.கே நகரில் இருந்து திரும்பி செல்லும் போது காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் கூடியிருந்த 👩பெண்கள் தினகரனை நோக்கி 💸20 ருபாய் நோட்டை காட்டி கூச்சலிட்டனர்😱. இதனால் ஆத்திரம் அடைந்த தினகரனின் ஆதரவாளர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்க தொடங்கினர்😳.
தடுக்க🚫 வந்த 👮போலீசாருக்கும் தினகரன் அணியினருக்கும் வாக்குவாதம்🗣 ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காசிமேடு சாலை முழுவதுமே ஆங்காங்கே கூடிய 👩பெண்களால் தினகரனால் அந்த பகுதியில் இருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது😱. இதனை அடுத்து தினகரனுக்கு எதிர்ப்பு😡 தெரிவித்தவர்களை தாக்கிய இளைஞர்களை 👮போலீசார் கைது⛓ செய்தனர். பின்னர் 👩பெண்கள் கலைந்து சென்றதால் தினகரன் அங்கிருந்து புறப்பட்டார்.

📲 Get Tamil News on Whatsapp 💬