நாளை வெளியாகும் ✍12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னை தியாகராயநகரில், 💻சுருக்கெழுத்தாளர் பயிற்சி மையத்தின் 80வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில்🎉 பங்கேற்ற 🏫பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நாளை ✍12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான ⌚இரண்டு நிமிடங்களில் தேர்வு ✍எழுதிய மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கு 📲எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என்று தெரிவித்தார்🔈. அதனை தொடர்ந்து பேசிய அவர்🎙, "சிபிஎஸ்இ-யை விட சிறப்பான பாடத்திட்டத்தை 🏛தமிழக அரசு உருவாக்கியுள்ளது. 🌊நீர் மேலாண்மை, நில மேலாண்மை, பெற்றோர் பாசம், தேசப்பற்று மேம்பாடு உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு புதிய 📚பாடத்திட்டத்தில் கற்பிக்கப்படும்👍" என்று 📰செய்தியாளர்களிடையே கூறினார். அதனை தொடர்ந்து, 🏫பள்ளிகள் திறப்பு தேதி 📆ஜூன் 1 என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை🚫 என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get Tamil News on Whatsapp 💬