🔌மின்கட்டணம், 💸சொத்துவரி போன்றவற்றை செலுத்த ஸ்மார்ட் கார்டு திட்டம்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னை மாநகராட்சியில் 💸சொத்துவரி, தொழில் வரி, 🔌மின்கட்டணம், 🚰குடிநீர் வரி ஆகியவற்றை 💳ஸ்மார்ட் கார்டு மூலம் செலுத்தும் நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்🔈. மேலும், அவர் கூறுகையில்🎙, "சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நம்ம சென்னை செயலி மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சொத்து வரி, தொழில் வரி, வர்த்தக உரிமம் போன்ற 5 சேவைகள் இப்போது இணைக்கப்பட்டுள்ளது. 📲நம்ம சென்னை செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பிறப்பு, இறப்பு, தொழில் வரி, சொத்துவரி மற்றும் வர்த்தக உரிமம் 📜சான்றிதழ்கள், ரசீதுகளை 💻பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கூடுதலாக இதன் நிலைப்பாடு பற்றியும் 📲இச்செயலி வாயிலாக அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது👏" என்று அறிவித்துள்ளார்🔈. மேலும், சென்னை மாநகராட்சியுடன் 🏦ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இணைந்து ஸ்மார்ட்கார்டு வசதியை உருவாக்கி வருகிறது👍 என்பது குறிப்பிடவேண்டியவை.

📲 Get Tamil News on Whatsapp 💬