வழக்குகளை திரும்பபெறாவிட்டால் மீண்டும் போராட்டம்😳-நெடுவாசல் போராட்டக்குழு🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

நெடுவாசலில், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஆழ்துளை கிணறுகளை நிரந்தரமாக மூடுவதோடு, அந்த திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டு வந்தது😔. அப்போது, போராட்டத்தை தூண்டிவிட்டதாக சுமார் 1,500 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது😟. அப்படி, போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்😐 என்றும் உடனடியாக ஆழ்குழாய் கிணறுகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூட🚫 வேண்டும் என்று மாவட்ட 💺ஆட்சியரிடம் போராட்ட குழுவினர் மனு அளித்தனர்📜. அதனையடுத்து🎙, "போரட்டத்தை வாபஸ் வாங்கும்போது எந்த வழக்கும் போடுவதில்லை என்று ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டது👍. ஆகையால் 💪போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் வாங்கவில்லை🙄 என்றால் உயர் மட்டக்குழுவை கூட்டி பெரிய அளவில் 💪போராட்டம் நடத்தப்படும்😳" என்று போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் கூறியுள்ளார்🗣 என்பது குறிப்பிடவேண்டியவை.

📲 Get Tamil News on Whatsapp 💬