ஆளுநரை சந்தித்து 🙏கோரிக்கை வைத்துள்ள இரு சார்பாளர்கள்😳-ஆளுநரின் முடிவு என்ன⁉

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கர்நாடகாவில் காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி மற்றும் பாஜக-வினர் ஆட்சியமைக்க உரிமை 🙏கோரியுள்ள நிலையில், கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா யாரை அழைப்பார்⁉ என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 🗳முடிவுகளில், பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன🎉. இந்நிலையில் திடீர் திருப்பமாக பாஜக ஆட்சியில் அமர்வதை தடுப்பதற்காக, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து🤝 ஆட்சியமைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. மற்ற மாநிலங்கள் போல் கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் முறைகேடு நடந்துவிடக்கூடாது🚫 என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறியுள்ளார்🗣. ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்🎙, அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரினோம், மேலும் எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்😳.
இன்று காலையில் ஆளுநரை சந்தித்தபின் பாஜக வேட்பாளர் எடியூரப்பா கூறியதாவது🎙, தங்களுடைய 104 எம் எல் ஏக்கள் கையெழுத்திட்ட✍ ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் தந்தேன்👍 என்று தெரிவித்தார். மேலும் சட்டமன்ற பாஜக தலைவராக தங்கள் கட்சி நிர்வாகிகள் தம்மை தேர்ந்து எடுத்துள்ளனர்😯. ஆட்சி அமைக்க உரிமை 🙏கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததாகவும் எடியூரப்பா தெரிவித்தார்🔈.

📲 Get Tamil News on Whatsapp 💬