நடன இயக்குனர் 🕺தினேஷ் நடிக்கும் படம் குறித்து ⭐உதயநிதி🎙

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடன இயக்குநர் 🕺தினேஷ் மாஸ்டர் நாயகனாக அறிமுகமாகும் படம் 🎥ஒரு குப்பைக் கதை. 🎬காளி ரங்கசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தில் 💃மனிஷா யாதவ் நாயகியாக நடித்துள்ளார். 💸ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா🎉 இன்று நடந்தது. அதில் பேசிய ⭐உதயநிதி🎙, "தினேஷ் மாஸ்டருக்கும், எனக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது😯. எனது முதல் மூன்று படங்களுக்கும் 🕺தினேஷ் மாஸ்டர் தான் நடனம் சொல்லிக் கொடுத்தார். இவர் ஏன் ஹீரோவாக நடிக்கிறார் என்று முதலில் யோசித்தேன். பின்னர் படம் பற்றி கேள்விப்பட்ட நான், படத்தை நாமே வெளியிடலாம்🙄 என்று முடிவு செய்தேன். ஒரு குப்பைக் கதை படம் 🎥மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல படங்கள் வந்தால் 👏பாராட்டுவதும், சுமாரான படங்களை விமர்சிப்பதும் வழக்கம் தான்😳. அந்த வகையில் இந்த படத்திற்கு நல்ல 🎙விமர்சனங்கள் வரும் என்று நம்புகிறேன்🙂. படம் மே 25-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது👍" என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get Kollywood on Whatsapp 💬