🏫பள்ளி 🚐வாகனங்களை ஆய்வு செய்த போக்குவரத்துத்துறை 👥அலுவலர்கள் குழு👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

வரும் ஜூன் 1ஆம் தேதி, 🏛தமிழகத்தில் 🏫பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து 🏫பள்ளி வளாகங்களில் அனைத்தும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன🔈. பள்ளிப் 🚐பேருந்துகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உத்தரவிடப்பட்டுள்ளன⚖. இந்நிலையில் மேற்கு மற்றும் தென் மேற்கு சென்னையில் 49 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 129 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன👍. இதற்கான குழுவில் போக்குவரத்து 👮அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், 💸வருவாய் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, 📜சான்றிதழ்களை வழங்கினர். நகரில் உள்ள 630 வாகனங்கள் குறித்த இறுதி அறிக்கை, 10 நாட்களில் போக்குவரத்துத் துறையிடம் சமர்பிக்கப்படும்🙄. ஆய்வின் போது வாகனத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது⚖.

📲 Get Tamil News on Whatsapp 💬