3⃣ கோரிக்கைகளை முன்வைக்க 🏛தமிழக அரசு முடிவு 👍

  |   செய்திகள்

காவிரி வழக்கில் 🏛உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ள இன்றைய விசாரணையின் போது 3⃣ கோரிக்கைகளை முன்வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக😯 தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு உருவாக்க உள்ள அமைப்பிற்கு 🌊காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும், இதனை உடனடியாக அரசிதழில்📄 வெளியிட வேண்டும் மற்றும் அமைப்பின் தலைமையிடத்தை பெங்களூருவில்🏙 இருந்து மாற்ற வேண்டும் என்ற 3⃣ கோரிக்கைகளை தமிழக அரசு சார்பி்ல் முன்வைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது🗣. மேலும், காவிரி வரைவு திட்டத்தை✍ ஏற்பதாகவும் ஒரு சில விஷயங்களை தவிர்த்து வரைவு திட்டத்தை📄 ஏற்கிறோம் என கர்நாடக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம்😯 என பெயர் வைக்க தமிழகம் கோரினால் அதை கர்நாடக அரசு எதிர்க்கும்🚫 எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து நடந்த விசாரணையில்🗣 மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்திற்கு✍ தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு கர்நாடகம் நீர்🌊 தாராவிடில் மத்திய அரசிடம் முறையிடலாம்🙄 என்று குறிப்பிட்டிருந்ததை தமிழக அரசு எதிர்த்துள்ளது. மேலும் இதற்கான விசாரணையை🗣 உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது👍.

📲 Get Tamil News on Whatsapp 💬