👩நிர்மலா விவகாரம்- சிபிஐ விசாரணை இல்லை🤔

  |   செய்திகள்

கல்லூரி மாணவிகளை👥 தவறான பாதைக்கு அழைத்ததாக கல்லூரி 👩பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது⛓ செய்தனர். இது தொடர்பாக 👮சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி🗣 வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கை✍ சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி ⚖ஜி.எஸ்.மணி என்ற வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில்🏛 வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள்👥, ஒரு அமைப்பின் விசாரணை முடிவடையும் முன்னரே, எப்படி அது சரியில்லை🙄 எனக்கூற முடியும். விசாரணை நடக்கும் நிலையில், அதில் தலையிட முடியாது😯 எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இது தொடர்பாக விசாரணை🗣 நடத்தி வரும் சிபிசிஐடி அதிகாரிகள், மதுரை காமராஜர் பல்கலையில்🎓, பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get Tamil News on Whatsapp 💬