காங்கிரஸ் கட்சியில் 👩பிரியங்கா காந்திக்கு பதவி😯

  |   Tamil News B

✍இளவேனில்🌄

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி 👩பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் 👵சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் 🗳தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார். 👥வாக்காளர்களை சந்தித்து ஆதரவுகளையும்👏 திரட்டுவார். ஆனால் கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்தார்😐. இந்நிலையில், தற்போது முதல் முறையாக 👩பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டு, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல்காந்தி நியமித்து உள்ளார்👏. இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் 👨அசோக் கெலாட் இன்று வெளியிட்டார்🙂. மேலும், உத்தரபிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார்👍 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்த அறிவிப்பு 👥தொண்டர்களை உற்சாகம்😍 அடைய செய்துள்ளது. இதனை தொடர்ந்து வரும் 🏛நாடாளுமன்ற 🗳தேர்தலினை மனதில் வைத்து, அவர் தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது👀.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬