சாலை மறியலில்🚫 ஈடுபட்டதால் 👥ஜாக்ட்டோ ஜியோ அமைப்பினர் கைது⛓

  |   Tamil News B

✍இளவேனில்🌄

🏛அரசு 👥ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம்😨 நேற்று தொடங்கியது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், உள்ளிட்ட 🙏12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று 📆2வது நாள் போராட்டத்தில் 🏛தமிழகம் முழுவதும் 300 இடங்களில், அனைத்து மாவட்டத்திலும் தாலுகா அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய 🏢அலுவலகங்கள் முன்பு கூடி 🙏கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்😳. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது😟. இதனையடுத்து, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, அவிநாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 👥500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது⛓ செய்து 🏛அரசு 🚌பஸ்களிலும், 🚐வேன்களிலும் அழைத்து சென்றனர். பல இடங்களில் 👨ஆண்களை விட 👩பெண்கள் தான் அதிகளவில் மறியலில்🚫 ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬