👥ஜாக்ட்டோ ஜியோ 💪போராட்டத்தால் பள்ளிகள் மூடப்பட கூடாது🚫-🏫பள்ளிக்கல்வித்துறை⚖

  |   Tamil News B

✍இளவேனில்🌄
பல்வேறு 🙏கோரிக்கைகளை முன்வைத்து 🏛அரசு 👥ஊழியர்கள், ஆசிரியர்கள் என 7 லட்சம் பேர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் நேற்று முதல் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தால் 80 சதவீதம் அரசு 🏫பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால், மாணவர்கள் அவதிக்குள்ளாக்கப்பட்டனர்😟. இதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 🙏வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், போராட்டம்💪 காரணமாக 🏛அரசு 🏫பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது⚖. மேலும் பள்ளிகளில் பணிபுரியும் 🍛சத்துணவு அமைப்பாளர்கள் பள்ளிகளை திறந்து வைத்து பள்ளி செயல்படுவதை உறுதி👍 செய்ய வேண்டும் எனவும்😯 தெரிவித்துள்ளது. மேலும், 👥ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, ஆசிரியர் பயிற்சி 🏫பள்ளியில் படிக்கும் மாணவர்களை கொண்டு பள்ளிகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்🔈 வெளியாகியுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬