தடையை🚫 மீறி சென்னையில் 🚌பேருந்து தினம் கொண்டாடிய 👥மாணவர்கள் கைது⛓

  |   Tamil News B

✍இளவேனில்🌄
சென்னையில் நேற்று முன்தினம் தடையை🚫 மீறி 🚌பேருந்து தினம் கொண்டாடிய🎉 அம்பேத்கர் கலைக் 🏢கல்லூரி மாணவர்கள் 👥5 பேர் கைது⛓ செய்யப்பட்டுள்ளனர். பிராட்வேயில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் 57எப் வழித்தட பேருந்தில், வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த 👥மாணவர்கள், நேற்று முன்தினம் தடையை மீறி பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 🚌பேருந்தின் மீது அபாயகரமாக நின்று கொண்டு மாணவர்கள் பயணித்துள்ளனர்😱. இது தொடர்பான 📹வீடியோ காட்சி மூலம் 👮எம்.கே.பி நகர் போலீசார் விசாரணை🗣 நடத்தி வந்த நிலையில், 🚌பேருந்து தினம் கொண்டாடியதற்காக🎉 அப்துல் ஹாகிப், பிரவின், நவின், ஜிர்ஃபான் பாஷா, மோகன் குமார் ஆகிய 5 மாணவர்கள் கைது⛓ செய்யப்பட்டுள்ளனர்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬