திருவாரூர் 🗳தேர்தல் ரத்து🚫 விவகாரம்-🏛உயர்நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல்

  |   Tamil News B

✍இளவேனில்🌄
முன்னாள் 💺முதல்வர் கலைஞர் மறைவையடுத்து திருவாரூர் தொகுதி காலியாக உள்ள நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் திருவாரூர் தொகுதியில் மட்டும் இடைத்தேர்தல் ஜனவரி 28ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. கஜா புயல் நிவாரண பணிகளை காரணம் காட்டி, 📆2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 🗳இடைத்தேர்தல் நடத்த வேண்டாம்😳 என தலைமைச்செயலாளர் 👩கிரிஜா வைத்தியநாதன் தேர்தல் ஆணையத்துக்கு ✍கடிதம் எழுதினார். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்களும் தேர்தல் இப்பொழுது வேண்டாம்🙄 என்று கூறியதால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை கடந்த 📆7ம் தேதி ரத்து🚫 செய்தது. இந்நிலையில் திருமங்கலத்தை சேர்ந்த 👨தாமோதரன் என்பவர் 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்துசெய்ய🚫 தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை😯 என திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்😐. மேலும் ரத்து செய்ய 🏛மத்திய அரசுடன் ஆலோசித்து🤔 ஒப்புதல்✍ பெறவில்லை எனவும் மனுதாரர் புகார் அளித்துள்ளார்😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬