விதியை மீறியதால் 🏢போத்தீஸ் ஜவுளி கடைக்கு சீல்🔒

  |   Tamil News B

✍இளவேனில்🌄

🏛நாகர்கோவில் நகராட்சியின் உள்ளூர் திட்டக்குழுமத்திடம் 5 மாடி கட்டிக் கொள்ள வரைபட அனுமதி பெற்றுவிட்டு, விதியை மீறி 🏢7 மாடி கட்டிடம் கட்டிக் கொண்டதாகவும்😱, வாகன🚗 நிறுத்துமிடம் என்று அனுமதி பெற்ற இடத்தில் 🍅காய்கறி கடை அமைத்ததாகவும் போத்தீஸ் ஜவுளிக்கடையின் விதிமீறல்கள் குறித்த புகார்கள் தொடர்ந்து வந்தது😐. அந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனத்தை நிறுத்த போதிய இடம் இல்லாததால் அங்கு கடும் 🚌போக்குவரத்து நெரிசல்😓 ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு 📆பிப்ரவரி மாதம் 10 ந்தேதி, போத்தீஸ் ஜவுளிக் கடையை பூட்டி சீல்வைக்க உள்ளூர் திட்டகுழும அதிகாரி உத்தரவிட்டார்⚖. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போத்தீஸ் நிறுவனம் இடைக்கால தடையாணை📜 பெற்றதால் கடைக்கு சீல் வைக்கப்படவில்லை🙄. இந்த நிலையில் இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்🗣 போது போத்தீஸ் ஜவுளிக் கடையின் விதிமீறல் உறுதி செய்யப்பட்டதால்😳, இடைக்கால தடை விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து 👮போலீஸ் பாதுகாப்புடன் சென்று போத்தீஸ் ஜவுளிக்கடையில் உள்ள ஊழியர்கள் மற்றும் 👥வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு அதிகாரிகள் கடைக்கு 🔒சீல் வைத்து சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬