அதிமுகவை 5 பேர் மீது வழக்கு தொடர் உயிர்ப்பலி வாங்கும் மின்னல்கள் மழை நேரத்தில் வீட்டுக்குள் இருப்பதே நல்லது

  |   Ramanathapuramnews

சிவகங்கை, அக். 15: சிவகங்கை மாவட்டத்தில் மின்னல்கள் தொடர் உயிர்ப்பலி ஏற்படுத்தி வருகின்றன. எனவே மழை நேரங்களில் வீட்டுக்குள் இருப்பதே பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மழைக்காலங்களில் இடி, மின்னலால் பொதுமக்கள், கால்நடைகள் பாதிக்கப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. கடந்த மே.24ல் சிவகங்கை அருகே நடுமாங்குடியை சேர்ந்த அழகேஸ்வரி (40) மின்னல் தாக்கி உயிரிழந்தார். பெருமாள் மற்றும் கருப்பையா ஆகியோர் காயம் அடைந்தனர். இதேநாளில் மானாமதுரை காயாங்குளத்தை சேர்ந்த தெய்வா (21) என்ற பெண் மழை பெய்யும் போது வீட்டின் வெளியே கட்டியிருந்த மாட்டை அழைத்து வர சென்றார். அப்போது இடி தாக்கியதில் 2 மாடுகளும் இறந்தன. தெய்வாவும் காயம் அடைந்தார். மே.17ல் சிவகங்கை அருகே மகாசிவனேந்தலில் மின்னல் தாக்கி 23 ஆடுகள் உயிரிழந்தன. அக்.6ல் சிவகங்கை காளவாசல் பகுதியை சேர்ந்த சவரிமுத்துராஜன் (30), சிவகங்கை அருகே கோவானூரை சேர்ந்த மலைச்சாமி (59) ஆகிய இருவரும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இளையான்குடி அருகே தெற்குசமுத்திரம் தீபா (38), கானாடுகாத்தானில் தங்கராஜ் ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். கானாடுகாத்தானில் இருவர் மின்னல் தாக்கி காயமடைந்தனர். 2017ம் ஆண்டு காளையார்கோவில் அருகே மாராத்தூர், பொருசடிஉடைப்பில் மின்னல் தாக்கி 15 ஆடுகள் பலியாகின....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/FUkjvAAA

📲 Get Ramanathapuramnews on Whatsapp 💬