அமமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

  |   Viluppuramnews

கள்ளக்குறிச்சி, அக். 15: கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தெற்கு மாவட்ட கழக செயலாளர் கோமுகிமணியன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி துவக்கி வைத்தார். மாவட்ட கழக அவைத்தலைவர் பாண்டியன், நகர செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய கழக செயலாளர் மதுசூதனன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் கிருபாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி தலைவி தனலட்சுமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமது, தியாகதுருகம் ஒன்றிய செயலாளர் தங்கதுரை, மகளிர் அணி நிர்வாகி செல்வி, வார்டு செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுபோன்று தியாகதுருகம் மற்றும் சின்னசேலம் பகுதியிலும் அந்தந்த பகுதியை சேர்ந்த அமமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளர் கோமுகிமணியன் கலந்து கொண்டு நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Al1zDgAA

📲 Get Viluppuramnews on Whatsapp 💬